என் தேடல்கள்

நம் பேசிய மௌனம்
மறக்குமா நெஞ்சம்?

உன் கண்களில் மிளிரும்
தாய் அன்பு
அது மட்டுமே
நன் உன்னிடம்
தோற்றதற்கு காரணம்.

எனக்காக உதித்த
பாரதியே
நீ இல்லாமல் எனக்கு
வாழ்வு உண்டோ ?

ஒரு வழி பாதையில் சென்று
முத்த கடனாளியாக
மாற்றியவனே .

உயிரின் மையத்தில்
காதல் விதையிட்டு
கண்களால்
பார்த்து பார்த்து
வளர்த்த மதியோனே .

சிரிப்பின் இலக்கணத்தை
என்னக்குள் உணர்த்தியவன்
நீ தான்.

காதல் உண்டு
காதல் உண்டு
நாம் வாழ்ந்த நாள்களில்,

கானம் தானே
தாகம் தீர்த்தது.

உயிராய் நிறைந்தோனே
என் தேடல்கள்
உன்னோடு .

எழுதியவர் : ரதி ரதி (20-Jun-16, 9:33 am)
Tanglish : en THEDALKAL
பார்வை : 108

மேலே