எண்ணத்தில் துளிர்த்தவை - 12

வாழ்ந்திட விரும்புவன்
விட்டில் பூச்சியாய்
விரைவில் மடிகிறான் !

விருப்பமின்றி வாழ்பவன்
விரக்தியின் விளிம்புவரை
மண்ணில் வாழ்கிறான் !

வெற்றிபெற நினைப்பவன்
வெறியுடன் மோதுகிறான்
வெற்றிதனை இழக்கிறான் !

தோல்வியை நினைத்து
போர்க்களம் சென்றவன்
வெற்றிமாலை சூடுகிறான் !

எண்ணங்கள் எதுவாகினும்
இலக்கை நிர்ணயித்து
இமயத்தைத் தொட்டிடுக !

எதிரிகள் எவராகினும்
எடைபோடும் திறனுடன்
எந்நாளும் வென்றிடுக !

திட்டங்கள் வகுத்திட்டு
திறம்பட செயல்பட்டால்
தினம்தினம் ஆனந்தம் !

பகுத்தறிவு பயன்படுத்தி
வகுத்துவாழ பழகிட்டால்
வெற்றியே கிட்டிடும் !

மனமொரு திசையிலும்
மார்க்கமொரு திசையெனில்
மண்ணாகும் வாழ்க்கையும் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (22-Jun-16, 2:55 pm)
பார்வை : 432

மேலே