காரைக்காலில் சுனாமி, 2004
பூமி கிடுகிடுக்கிறது!
தரையெங்கும் வீதியிலே
அங்கங்கே பிளக்கிறது!
புழுதிப் புயல், மண் சரிவு!
பூமிக்குள் ஏற்படும் வெப்பம்
மூச்சுத் திணறித் தீப்பிழம்பாய்
வெடித்து பாறைகள் உருகி
ஆறாக வழிந்தோடுகிறது!
மரங்களெல்லாம் வேரோடு
பிய்த்து எறியப்படுகின்றன!
புகையோடு கலந்த சாம்பல்
படலம் காற்றில் பறக்கிறது!
கட்டடங்களின் கதவுகள்
சன்னல்கள் எல்லாம் பெயர்ந்து
சாமான்களெல்லாம் தண்ணீரோடு
அடித்துச் செல்லப்படுகின்றன!
எலிகள், பாம்புகள் எல்லாம்
தரையை நோக்கிப் படையெடுப்பு!
ஆடுமாடுகள் பெருகி வரும் கடல் நீரால்
தொலை தூரம் உருட்டிச் செல்லப்பட்டன!
மீன் வாங்க கடற்கரைக்குச்
சென்ற நானும் என் மனைவியும்
உயிர் பிழைச்சாப் போதுமடா சாமி
உயர்வான இடத்தைத் தேடி ஓடினோம்!
மனைவியையும் கைப்பிடித்து
மீனவர் வீட்டின் மாடியில் ஏறித்
தப்பித்தோம்! பிழைத்தோம்!
தப்பிச்சா போதுமடா சாமி...!