புதைக்காதீர்கள்

நான் மரணிக்கிறேன்
என்னோடு என் பேனாவைப்புதைக்காதீர்கள்

விசங்களை விழுங்கியே பயணித்திருக்கிறேன்
நிசங்களைச்சொல்லும் − என் பேனாவைப் புதைக்காதீர்கள்.

மௌனமொழிகளில் எனக்குள்ளே
பேசியிருக்கிறேன்
என் பேனாவோடு

என் இதயச்சங்கு ஊளையிடும்போதெல்லாம்
பேனா மட்டும் புதுகீதம் வாசிக்கும்.

என் கண்ணீரைக் கருவறுத்தது பேனா
எண்ணங்களை உலர்த்தி செருவறுத்தது நானா.

எமை அலட்சியமாய்
அள்ளி வீசியவர்களுக்கு
நச்சென்று நங்கூரம் போட்டது.

எமை உதறிய உறவுகளை
பட்டியல் போடும்
கதறிய அன்பர்களுக்கு
படையலும் போடும்.

சொல்லமுடியாத காதல்
காட்டமுடியாத சினம்
நேசிக்க நினைத்த உள்ளம்
அனுதினமும் அசைபோடும் ஆசை
சந்திக்க நினைத்த நெஞ்சம்
சருகான காயம்

அத்தனையும் சொன்னது− என் பேனா

எழுதியவர் : அ.ராஜா (22-Jun-16, 7:00 pm)
பார்வை : 80

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே