காதல் விண்ணப்பம்

நந்தவனத்து பூக்கள்
நகர்வலம் செல்கிறது
பெண்மை சாயல் கொண்டு ,,,,

ஓர விழிப்பார்வையால்
கவ்வி கொண்டு செல்கிறாள்
துடிக்கும் இதயங்களை ,,,,,

பாத குளுமை கண்டு
பின் தொடர்ந்தால்
சூரிய முகம் கொண்டு
சுட்டெரிப்பது ஏனோ ,,,?

வெட்க முகம் கொண்டு
சிரித்து நின்றாள்
பூத்து குலுங்கிடுமே
ஆடவர் மனமெல்லாம் ,,,,!

இரந்து நீயும்
வந்து விட்டால்
இரவிலும்
நான் குடை பிடிப்பேன்

கடந்து நீயோ
சென்று விட்டால்
பனித்துளியாய்
கரைந்திடுவேன் ,,,,!

எழுதியவர் : தங்கதுரை (22-Jun-16, 5:28 pm)
பார்வை : 127

மேலே