பொருளாதாரம் பற்றி தீர்க்கமான சிந்தனை

ஆச்சரியத்தில் பன்னாட்டுக்கம்பெனிகள்
அனைத்தும் விற்கிறார் பாபா ராம்தேவ்.
அதிர்ச்சியில் ஆயா
அரைக்கீரை விற்கிறான் அம்பானி!

உடல்நலம் வேண்டும் உலகத்திற்கு
இலவசமாய் யோகா கற்பிக்கும் இந்தியா!
பகையுடன் பல நாடுகள்
பிணம் குவிக்கும் ஆயுதம் விற்கிறது அமெரிக்கா!

ஆயுதம் விற்கும் போட்டியில் அமெரிக்காவுடன்
மல்லுக்கு நின்று அழிந்தது ரஷ்யா!
நல்லதை விற்க விளம்பரம் தேவை இல்லை,
அமெரிக்காகாரனுக்கு தெரியும்
நாடுகளிடை சிண்டு முடிவது.

பொருளாதாரம் பற்றி புதுப்புது சிந்தனை இன்றி
பொலிவிழந்தன ஏறக்குறைய எல்லா நாடுகளும்!
உலகவங்கி கடன் வாங்க உத்திகள் கையாளும்
சீனாக்கூட இந்தியாவும் முண்டியடித்து
மூக்கறுபட்டதே மிச்சம்!

அந்நிய நாட்டு முதலீடு வந்து
எதுவும் சாதிக்கப்போவதில்லை
உழைக்க இந்தியாவில் ஒரு கோடியல்ல
அதற்கு மேலும் இங்குண்டு

வேலைவாய்ப்பை உருவாக்கி
உற்பத்தியைப்பெருக்க ஏதும்
இங்கே நடப்பதாய் தெரியவில்லை
வெற்று தம்பட்டம் வெளுக்கிறது அரசியல்.

எது விற்குமோ அதை உற்பத்தி
செய்யாமல் இஷ்டத்துக்கு நடந்ததால்
இன்று பெரிய சிக்கலில் சீனா.
இந்தியா கற்று கொள்ள இதிலிருந்து எவ்வளவோ!

நுகர்ப்பொருளை தவிர நல்ல விஷயம்
எதுவும் தோணாமல் கன்னாபின்னாவென்று
காலம் தள்ளுகிறார்கள் இங்கேயும் எங்கேயும்
எங்கே போய் சேரப்போகிறது
இந்த பொருள் தேடும் படலம்..??

எழுதியவர் : செல்வமணி (22-Jun-16, 9:23 pm)
பார்வை : 143

மேலே