மௌன கவி

கரைகள் ஓரம்
கிளிஞ்சல் ஆகிறேன்!
நீ அலையாய் வந்தால்
என்னை இழுத்துப்போ!

விழிகள் மேல்கீழ்
இமைகள் ஆகிறேன்!
நீ நீராய் வந்தால்
என்னை நனைத்துபோ!

வீசும் ஒளியில்
நிழலாய் ஆகிறேன்!
நீ உருவம் என்றால்
அதில் தங்கிப்போ!

வீசும் காற்றில்
ஒலியாய் ஆகிறேன்!
நீ இசைதான் என்றால்
என்னை இசைத்துப்போ!

பயணம் பொழுது
பாதை ஆகிறேன்!
நீ திசைகள் என்றால்
என்னை அழைத்துப்போ!

பசியின் பொழுது
உணவாய் ஆகிறேன்!
நீ உதடு என்றால்
என்னை விழுங்கிப்போ!

கடலின் அலையில்
தொலைந்து போகிறேன்!
நீ படகாய் வந்தால்
என்னை அழைத்துப்போ!

இதயம் உள்ளே
உணர்வாய் ஆகிறேன்!
நீ காதல் என்றால்
என்னை தொட்டுப்போ!

பிரியும் தருணம்
வலிகள் ஆகிறேன்!
நீ கண்ணீர் என்றால்
கொஞ்சம் வடிந்துபோ!

மண்ணின் அடியில்
மரணம் ஆகிறேன்!
நீ பூக்கள் என்றால்
என்மேல் அமர்ந்துபோ!

எழுதியவர் : (23-Jun-16, 3:15 pm)
Tanglish : mouna kavi
பார்வை : 93

மேலே