பொழிந்த வான்
நேரிசை வெண்பா
வயக்காட்டில் தோகையொடு வண்ணமயி லாடக்
கயல்வரப்பில் நீந்திக் களிக்க - நயமான
தூக்கனாங் கூட்டுக்குள் தூங்கும் குருவியெழ
வாக்காய்ப் பொழிந்ததிவ் வான் !
-விவேக்பாரதி
நேரிசை வெண்பா
வயக்காட்டில் தோகையொடு வண்ணமயி லாடக்
கயல்வரப்பில் நீந்திக் களிக்க - நயமான
தூக்கனாங் கூட்டுக்குள் தூங்கும் குருவியெழ
வாக்காய்ப் பொழிந்ததிவ் வான் !
-விவேக்பாரதி