சொல்லாமலே

ஒரே ஒரு வார்த்தை
சொன்னால் வாழும் என் ஜீவனே...
உன் வாய்மொழிக் கேளாமல்
என் உள்ளம் நொருங்கிப் போகுமே......


உடைப்பது நீயென்று ஆனாலும்
உனக்காகவே எந்தன் இதயம் துடிக்குமே...
திறந்திடாதோ?... உன் இதய வாசல்
சொல்லிவிடு நீ இந்நேரமே......

ஒரே ஒரு வார்த்தை......

நொடி முள்ளாய் நிற்காது
உனைச் சுற்றி வந்தேன்...
அடி வானமாய் நீ
விலகி தூரம் ஓடுகிறாயே......


மேகமாய் நெருங்கிச் சென்றாலும்
மலருக்குள் தேனாய் மறைகின்றாயே...
மஞ்சள் வெயிலே மரகத குயிலே
என்னோடுப் பேச ஏனிந்த தயக்கம்
உன்னால் தானே எனக்கிந்த மயக்கம் ......


வால் இல்லாதக் காற்றாடியாய்
நூல் இல்லாதுப் பறந்தாலும்
என் நெஞ்சுக்குள்ளே
கொஞ்சும் கிளி நீதானே......


இருளும் ஒளியும் போல
இருமனம் ஒன்று சேராவிட்டால்
என் உயிருக்கு தீயை வைப்பேனே.......

ஒரே ஒரு வார்த்தை......

விழிகள் வீசும் வலையில்
விழுந்து விட்டேன் மீன்கள் போல
மறந்து என்னை நீயும்
விடுதலை செய்து விடாதே......


விரும்பும் இதயத்தில் அரும்பும் முல்லை
வலிகள் தாங்காது வதங்கிப் போகுமோ......


வெண் சங்கில் சாய்ந்தப் பின்னாலே
தங்கம் கூட தனியழகுப் பெறுதே...
உன் நினைவுகளை சுமந்து இருப்பதாலே
அங்கமும் ஆகாரமின்றி உயிர் வாழுதே......


ஆற்றின் கரையிலே இருந்தாலும்
வேர் அறுந்துப் போகையில்
பட்டுச் சாகுமே பச்சை மரமும்......


மௌனமோ?... மனசுக்குள்ளே கோபமோ?...
சொன்னால் தானே புரியும் வழக்கு
இல்லையேல் பட்ட மரந்தான் என்னிழக்கு......

ஒரே ஒரு வார்த்தை......

எழுதியவர் : இதயம் விஜய் (27-Jun-16, 7:42 am)
Tanglish : sollaamale
பார்வை : 269

மேலே