குறைப்பிரசவத்தில் தேவதைகளை இழந்த தாய் இது வேறு

"அமர்ந்திருக்கிறேன்
உங்களின்
ஆழ்ந்த நினைவுகளில்!

யாரைப்போல் இருந்திருப்பீர்கள்?
எவ்வளவு வளர்ந்திருப்பீர்கள் ?
அசை போடுகிறது மனம்..
உங்களில் ஒவ்வொருவரையும்
எண்ண எண்ண
உள்ளத்தில் ஒவ்வொரு நாளும்
வேதனைதான்!
எண்ணிப்பார்க்கிறேன்
இருந்திருந்தால்
நாம் ஒரே மாதிரித்தானே
இருந்திருப்போம் என்று !
இனிய சங்கீதத்தைப் போல
என்றும் என் பிரார்த்தனைகளில்
நீங்கள்-என் கண்களில் கண்ணீரோடும்.

என் உதிரத்தின்
இனிய குட்டித் தேவதைகளே!
நீங்கள்
குறைப்பிரசவத்தில்
பிரிந்திருக்கலாம்
நீங்கள் ஆணா? பெண்ணா?
என்பதைக் கூட
நான் அறியாதிருக்கலாம்
ஆனாலும்
உங்களை வயிற்றில் சுமந்த நான்
என்றும் உங்களின் அன்னைதான்!
நல்லதொரு நாளின்
நாம் மீண்டும் சந்திப்போம்
இனியதொரு தருணத்தில்
ஆனந்தத்தின் எல்லையில்......"

மீளாக்கம்: ந்ண்பர் காளியப்பன் எசேக்கியல், நன்றி.

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (27-Jun-16, 9:55 pm)
பார்வை : 130

மேலே