பொன் மொழிகள்---முஹம்மத் ஸர்பான்

எளிமை என்ற வாழ்க்கையின் பாதையில்
தான் இனிமை எனும் நொடிகளின் பயணம்

காயங்கள் தாங்கிய உள்ளமும் சோகம் நிறைந்த வாழ்க்கையும்
கண்ணீரில் கரை தேடும் கண்களும் தினந்தினம் ஓதும் வேதம்
முடியும் என்ற நம்பிக்கை தான்

நல்லவன் என்பவன் நிலமாக இருக்கிறான்.
அதில் வெப்பமும் குளிரும் வானிலையாக வந்து போகிறது

பணத்தை நேசிக்கும் உள்ளம் உணர்வுகளின் வலிக்கு
கோடிகள் இருந்தாலும் மருந்து வாங்க முடிவதில்லை

வாழ்க்கையும் பங்கு போடப்பட்டு விற்கப்படுகிறது
கால்கள் இருந்தும் எழ முடியாமல் கிடக்கும் முனிவனிடம்

கணிதம் என்பதை வரையறுத்துக் கொண்டாலும்
எண்களின் தொடர்ச்சியாய் கட்டுப்படுத்த முடிவதில்லை
வாழ்க்கை என்பதை அறிந்து கொள்ள முனைந்தாலும்
தன்னைத் தானே மனிதன் ஆராய்ந்து வாழ விரும்பவில்லை

முட்களின் மேல் நின்று கொண்டு அழுவதை விட
நெருப்பில் விழுந்து எரிந்து கொண்டு முயல்வது மேல்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (28-Jun-16, 6:06 am)
பார்வை : 131

மேலே