எலி பொறி

ஒரு அழகிய ஊர் அந்த ஊரிலுள்ள ஒரு பழைய வீட்டில் எலித்தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது ,

அதனால் அந்த வீட்டின் எஜமானர் ஒரு எலிப்பொறியை வாங்கி கொண்டு வந்தார் ,அந்த எலிப் பொறியினுள் உணவு துண்டை சிறிது வைத்து எலி மாட்டுமாறு எலி வலையின் அருகில் வைத்தார்

அடுத்த நாள் அந்த வீட்டின் எஜமானருக்கு அவரின் கைப்பேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது அதில் பேசியவர் உங்களுக்கு வெளியூரில் சம்பள உயர்வுடன் கூடிய வேலை கிடைத்திருப்பதாகவும் உடனே அந்த வேலையில் சேர வேண்டுமெனவும் மேலும் அந்த வேலை பற்றிய விபரங்களையும் கூறி அழைப்பை துண்டித்து விட்டார்

அந்த வீட்டின் எஜமானருக்கு ஒரே சந்தோசம் நாளை அந்த வேலையில் சேர எண்ணி இன்றே வெளியூர் செல்ல முடிவு செய்தார் ,

எஜமானர் வீட்டை விட்டு புறப்படும் போது டப் என்று ஒரு பெரும் சத்தம் அந்த சத்தம் எலி பொறியில் எலி மாட்டிக் கொண்ட சத்தம் ,

எஜமானரோ வீட்டை விட்டு புறப்படும் போது தான் இந்த எலி மாட்ட வேண்டுமா இனி யார் போய் எலி பொறியையெல்லாம் பார்ப்பது எலி தானே அப்படியே சாகட்டும் என்று எண்ணி எஜமானர் வெளியூர் புறப்பட்டு சென்று விட்டார் ,

அப்படியே ஒன்றரை வருடம் ஓடியது

அந்த எஜமானர் தனது ஊருக்கு திரும்பினார் ,தான் முன்பு தங்கியிருந்த எலி தொல்லை நிறைந்த பழைய வீட்டிற்கு வந்தார் ,

ஆள் வைத்து தனது பழைய வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது தான் எஜமானர் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்

அந்த ஆச்சர்யம் என்னவெனில் எஜமானர் தான் ஒன்றரை வருடங்களுக்கு முன் வைத்த அந்த எலிப்பொறியில் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு மாட்டிய எலி அந்த எலிப்பொறியிலேயே சிக்கியவாறு இன்னும் உயிருடன் இருந்தது

இதைக் கண்ட எஜமானாரால் நம்பவே முடியவில்லை ,

அந்த எலியால் எப்படி எலிப்பொறியில் அகப்பட்டவாறே ஒன்றரை ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருக்க முடியும் என எண்ணி நாள் முழுக்க அந்த எலியை கண்காணிக்க ஆரம்பித்தார் எஜமானர்

இரவு மங்கி பொழுது விடிந்தது இருப்பினும் எஜமானர்
அந்த எலியையே பார்த்துக் கொண்டிருந்தார்

சிறிது நேரம் கடந்தது எங்கோ இருந்து வந்த ஒரு எலி தன் வாய் முமழுவதும் வைத்திருந்த உணவை அந்த அகப்பட்ட எலிக்கு தந்தது அகப்பட்ட எலியும் அந்த எலி தந்த உணவை சாப்பிட்டு கொண்டது

இவ்வாறாக தினமும் அகப்பட்ட எலிக்கு அந்த எலி உணவை கொண்டு வந்து தந்து வந்தது அகப்பட்ட எலியும் அந்த எலி கொடுத்த உணவை சாப்பிட்டுக் கொள்ளும்

இதை கண்டு எஜமானருக்கு அவரின் கண்களில் இருந்து கண்ணீரே வந்து விடும் போலும் ஆனது

பிறகு எலிப்பொறியில் இருந்த எலியை எஜமானர் விடுவித்து விட்டார் ,

அடுத்த நாளிலிருந்து எஜமானர் தன் சுயநலத்தையெல்லாம் விட்டு அனைத்து மக்களுடனும் அன்போடும் பாசத்தோடும் பழக ஆரம்பித்தார்






-விக்னேஷ்

எழுதியவர் : விக்னேஷ் (28-Jun-16, 10:42 pm)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : eley poRi
பார்வை : 534

மேலே