10 செகண்ட் கதைகள் - தர்மாஸ்ஃபிளாஸ்க்
ஒரு மனிதன் நீண்ட நாளைக்குப் பிறகுகல்யாணம் பண்ணிக் கொண்டான்.
மனைவியிடம் நல்ல பெயர் வாங்குவது எப்படி? என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.
கடை வீதிக்குப் போனான். கடையில் ஒருபொருளைப் பார்த்தான்.
இது வரையில்அவனுக்குப் பரிச்சயம் இல்லாத ஒரு பொருள் அது.
‘‘அது என்னங்க?’’ என்று விசாரித்தான்.‘‘அதன் பெயர் தர்மாஸ்ஃபிளாஸ்க்!’’ என்றார் கடைக்காரர்.
‘‘அப்படின்னா என்னங்க... அது எதுக்குஉபயோகம்?’’‘‘இதுக்குள்ளே சூடான பொருளை வெச்சாசூடாவே இருக்கும்! குளிர்ச்சியான பொருளைவெச்சா குளிர்ச்சியாவே இருக்கும்!’’‘‘அப்படியா அப்படின்னா அதுலே ஒண்ணுகொடுங்க!’’ வாங்கிக் கொண்டு உற்சாகமாகவீட்டிற்கு புறப்பட்டான்.
மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கவேண்டும் என்பது அவன் திட்டம். அந்தத்திட்டப்படி மேலும் சில பொருள்களை வாங்கிக்கொண்டு வேகமாக நடந்து வீட்டுக்குள்நுழைந்தான்.‘‘சீக்கிரம் இங்கே வா!’’ என்று மனைவியைஅழைத்தான்.அவள் வந்தாள். பார்த்தாள். ‘‘என்னங்க இது?’’‘‘இது ஒரு புதுமையான பாத்திரம்!’’‘‘அப்படியா?’’‘‘ஆமாம்! இதன் பெயர் தர்மாஸ்ஃபிளாஸ்க்!’’‘‘எதுக்கு இது?’’ என்று தெரியாதது போலகேட்டாள்.
‘‘இது சூடான பொருளைச் சூடாகவும்,குளிர்ச்சியான பொருளைக் குளிர்ச்சியாகவும்அப்படியே வெச்சிருக்கும்!மனைவி கேட்டாள்: ‘‘உள்ளே என்ன இருக்கு?’’அவன் சொன்னான்: ‘‘ஒரு கப் காபியும் + ஒருகப் ஐஸ்கிரீமும்!’’
மனைவி மயங்கி விழுந்தாள்.