அன்பே உன்னால்
என்னால் முழுவதுமாக போர்த்திக்கொண்டு தூங்க முடியாது
காரணம் எனக்கு மூச்சு திணறல் உண்டு
இருந்தும் போர்த்திக்கொள்வேன் உன்னோடு
நீ எனை அணைக்கயில்
நான் குத்துயிரும்
குலையுயிருமாய்
கிடப்பேன்
அது தெரியாமல்
அன்பே நீ எனை இருக அணைப்பாய்
மீதி உயிரும்
உன் அணைப்பில் அணைந்துவிடும் ஆசையில்(உன் நெஞ்சில் விழ ஆசைபட்டு)
என் மார்பில் நீ தலை வைத்து தூங்குவாய்
என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை
வலியைத்தான்
உன்னையல்ல
நான் உனை இழக்க போவதில்லை
நான் இறக்கும் வரை
வலி கூட
இன்று சுகமாய்
இருக்கிறது
அன்பே
உன்னால்
(அன்பே உன்னால்
வலி கூட இன்று
சுகமாய் இருக்கிறது)
~ பிரபாவதி வீரமுத்து