ஒரு மாணவனின் கனவு

ஒரு மாணவனின் கனவு

ஓடி விளையாடு பாட்டு படிகனும்
ஓட்ட மென்பதோ கனவு

படித்து மட்டுமே பட்டம் பெறனும்
பட்டம் விடுவதோ கனவு

உலகம் உருண்டையென படித்தே உணரனும்
கோலி உருண்டையோ கனவு

ஒன்றை இழந்து இன்னொன்றைப் படிக்கனும்
அனைத்தையும் படிப்பதும் கனவு

இலவச மருத்துவம் செய்து காட்டனும்
இலவசக் கல்வியோ கனவு

மதிப்பெண்னுக்கு மட்டுமே படித்து முடிக்கனும்
கற்றல் என்பதோ கனவு

பணம்வைத்து பணம்பறிக்கும் சமுதாயத்தின் கல்வியில்
நான்பார்க்கும் கல்வியும் நடக்காதகனவு

கனவுகள் அடுக்கி காலமும் காத்திருந்தும்
பெற்றோர் கனவுகளில் கரைவதே
ஒரு மாணவனின் கனவு


-மூர்த்தி

எழுதியவர் : moorthi (30-Jun-16, 6:49 pm)
பார்வை : 114

மேலே