பகுத்தறிவு
மூண்டது மூன்றாம் உலகப் போர் என
கொசுவோடு மனிதன் கொடும்போர் புரிகிறான்
குருதி குடித்து கொள்ளை நோய் பரப்பி
மனித குல வேரறுக்க கொசுப்படை அணிவகுப்பு
தடுத்து நிறுத்தி தற்காத்து முறியடிக்க
தட வாளத் தயாரிப்பு தொழிற்கூடம்
மீட்பு நிவாரணப் பணிக்கு
மருந்து மாத்திரை மருத்துவக்கூடம் என
ஆயிரம் ஆயிரம் ஆட்கள் அணிவகுப்பு
இரவில்லை பகலில்லை - இந்த
இடை நில்லாப் போருக்கு முடிவே இல்லை
இறுதி வெற்றி மனிதனுக்கே எனும்
இறுமாப்புத் தேவைஇல்லை
பின்னரும் உண்டு பேராபத்து
கொசு ஒழிய கொசு சார் தொழில் ஒழியும்
பல்லாயிரம் பேர் பட்டினி கிடப்பர்
படிப்படியாய் ஒழிப்பதே பகுத்தறிவு ஆகும்
முதற்படியாய் முகாம்கள் அமைத்து
கொசுக்களை அங்கே குடி அமர்த்தலாம்
கிழடாகி சாகும்வரை அவைகள்
மலடாய் இருக்க மருந்து தெளிக்கலாம் - இதன் மூலம்
மூன்றாம் போருக்கு முடிவு கட்டலாம்
- நரியனுர் ரங்கநாதன், செல் : 9442090468
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
