சீக்கிரமா வந்துரு

ஏ கருவாச்சி !!!
கள்ள பூனை!!!!
இங்க வாடி........
அழகான என் பெயர்மறந்து ரொம்ப நாளாச்சு!!!
அதிசயமா நீ
பெயர் சொல்லி அழைக்கிறப்போ
கோபமா இருக்கியோண்ணு
தவிக்கிறதும் பழகிருச்சு!!!!
குழந்தைதனங்களோடு நானும்
கொட்டு வைச்சு திருத்தும் நீயும்
அப்பாவ போலதான்
கண்ணு முன்ன நீ இருந்த!!!
என்னடி சாப்பிட்ட ?
ஏன் குரல் நல்லா இல்ல?
ஏதாச்சும் பிரச்சனையா?
குடைய எடுத்தியா?
மழையில நனையாத !
இப்படி நீளும் உன் அக்கறையான அதட்டல்களுக்குள்
அம்மாவ
பிரிஞ்சிருந்த நினைப்பே வந்ததில்ல!!!
காலையில ஆரம்பிச்சா கண்ணமூடி தூங்கும்வரை இப்படித்தான்
எல்லாமா நீ இருந்த!!!
என்னாச்சு உனக்கு!!!
கோபமா பாத்திருக்கேன்!
நீ திட்ட கூட கேட்டிருக்கேன்!
அப்போல்லாம்
வெறுப்பா பார்த்து
நீ நெருப்ப கொட்டலயே!
என்னாச்சு உனக்கு?
பத்து தடவ படிச்சு படிச்சு
நீ சொல்லுறதே புரியாம முழிக்கிறவ
இந்த மௌனத்த
என்னன்னு புரிஞ்சுக்குவேன்?
படிச்ச ரைம ஒப்புவிக்கும் குழந்தையா!
நடந்ததெல்லாம் ஒளறுவேனே
ஏதாச்சும் விட்றுச்சா?
நேரத்துக்கு சாப்பிட்டேன்!
இரவு ரொம்ப விழிக்கலயே
உன்கூட பேசிட்டே தூங்கிட்டேனே!
வேறென்ன தப்பு பண்ணேன்?
அழுதா
நீ தாங்க மாட்டேன்னு
தெரிஞ்சு தான் பேசல...
குறுஞ்செய்தி அனுப்புனா
தொல்லைணு திட்டுவ....
எப்ப வருவேன்னு
காத்துகிட்டு இருக்கேன்....
இப்படித்தான் நடந்துப்பேன்னு
நல்லாவே புரிஞ்சவன் நீ....
ரொம்பநாள் தாங்காது
சீக்கிரமா வந்துரு!

எழுதியவர் : shanju (30-Jun-16, 7:57 pm)
பார்வை : 222

மேலே