தினம் ஒரு பாட்டு இயற்கை - 19= 150
வண்ணத்தோட்ட சொந்தக்காரன்
வரும்வரை ஆடிடுவோம்….!
வாசம் வீசும் பூப் பறித்து
கார் கூந்தலில் சூடிடுவோம்…..!
அந்தி பனிமழை பொழிகின்றது
அதிலிந்த தேன் மலர்கள் நனைகின்றது !
மலர்களை வளர்ப்பவன் யாரென்று
அறிய பாவை மனம் துடிக்கின்றது !
வண்ண வண்ண பூக்களுடன்
வண்ணத்துப் பூச்சிகளும்;
வட்டமிட்டு கொட்டமடிக்கும்
வடிவழகு தோட்டம்மிது…!
மகரந்தம் சேர்ப்பற்கு
கருவண்டு நாடுவது
அழகான மலர்களை…
இது அதிசய மலர்க்கணை !
தென்றல் காற்று ஜோராய் வீச
ஓன்றோடு ஒன்று லேசாய் உராச
சத்தமே இல்லாத பனிமுத்தம்
இங்கு நித்தமும் நடப்பது அற்புதம் !
கண்ணுக்கு புலப்படும் காட்சிகளில்
இது கவர்ச்சி மிகுந்த காட்சி !
எண்ணித்துணிக கருமம்போல்
நெஞ்சில் ஆட்சி செய்யும் காட்சி !