நெல்லை ராம்குமார்

மூன்று மாதங்களுக்கு முன் படித்து வேலை தேடி சென்னை வரும் ஒரு கிராமத்து இளைஞன் ..இன்று அவன் கொலைகாரன் சட்டத்தின் பிடியில் ..!!!

பார்த்தவுடன் அவள் மேல் காதல் நேரில் போய் சொல்லி இருக்கிறான் .. அவள் ஏற்கவில்லை ..அவமான படுத்தி இருக்கிறாள் ..நீ என்ன வேலை செய்கிறாய் நான் என்ன வேலை செய்கிறேன் .. இதெல்லாம் சரிப்பட்டு வராது ..இங்கிருந்து போய் விடு //


இன்னமும் பேசி இருக்கலாம்இதற்கு மேலும் பேசி இருக்கலாம் இருவரும்..யார் கண்டது ..!!
இவ்வளவுதான் செய்தி தாளில் வந்தது ...

இந்த சமூகம்
கடைக்கோடியில் உள்ள கிராமத்தில் இருக்கும் ஒருவனை பொறியியல் படி என்கிறது ..வேலை கிடைக்க விடாமல் செய்து அவனை தெண்டம் என்கிறது .. துரத்தி கொண்டு போய் சென்னையில் விடுகிறது ..சென்னை அந்நியமாக தெரிகிறது ..வேலை கிடைக்காத விரக்தி வேறு வேலை செய்ய சொல்கிறது .சென்னையில்அழகான பெண்களை பார் என்கிறது ..நீ ஏன் காதலிக்க கூடாது என்கிறது .. காதலிக்க வைக்கிறது .. சமூக ஏற்ற தாழ்வுகள் காதலை ஏற்க மறுக்கிறது...!!

தொட்டதெல்லாம் தோல்வி ...விரக்தியின் உச்சம் கொலையில் முடிகிறது ... !!!


கொலை யார் செய்தாலும் தப்பு தான் ஆனால் வேலை வாய்ப்பை உருவாக்காத அரசு .. சரியான படிப்பை தேர்ந்தெடுக்க விடாத கல்வி சூழல் .. இவையே இது போன்ற சம்பவங்களுக்கு காரணமாக இருக்கிறது
படிப்புக்கேற்ற வேலை ..சூழலுக்கேற்ற கல்விமுறை... இவை இரண்டும் இல்லாத சமூகத்தில் இது தான் நடக்கும் ..!!

கடைக்கோடியில் பேருந்து கூட செல்லாத கிராமத்தில் எத்தனை ராம்குமார்கள் பொறியியல் படித்து கொண்டிருக்கிறார்களோ .அவர்களுக்கு இந்த அரசு என்ன செய்ய போகிறது ??!!!

ராம்குமாரை சிறையில் அடைக்கலாம் உச்சபச்ச தண்டனை வாங்கி கொடுக்கலாம் .. அது தான் அந்த பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கிடைக்கும் நீதி... ஆனால் இது போன்ற இன்னும் பல நூறு ராம்குமார்களை இந்த சமூகம் உருவாக்காமல் இருக்க அரசு என்ன செய்ய போகிறது ??!!!

எழுதியவர் : அருண்வாலி (3-Jul-16, 9:37 am)
சேர்த்தது : அருண்ராஜ்
பார்வை : 630

சிறந்த கட்டுரைகள்

மேலே