பாக்யா அட்டைப்படத்திற்கு கவிதை கவிஞர் இரா இரவி
![](https://eluthu.com/images/loading.gif)
பாக்யா அட்டைப்படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !
அதற்குள் அவளுக்கு நரையா ?
அவளை உற்று நோக்கியதும் தெரிந்தது !
கூந்தல் அல்ல அருவி என்பது !
கண்கள் வழி கவிதைக் கொட்டும்
கன்னிப்பெண் இடப்புறம் !
குன்றிலிருந்து கொட்டும் அருவியோ
குமரியின் தலையிலிருந்து வலப்புறம் !
குளித்து முடித்து குமரி
கொள்ளையடிக்கிறாள் உள்ளதை !
குளிக்கும் குமரியோ
கவனம் ஈர்க்கிறாள் !
கருங்கூந்தல் வெண்மை அருவியானது
தொழில் நுட்பத்தின் நுட்பத்தால் !
அமர்ந்தாலும் அழகு
நின்றாலும் அழகு
நடந்தாலும் அழகு
மொத்தத்தில் அழகோ அழகு !
--
.
--