பால்வெளி

பாலொளி நிலவொளி
அடியே இருவரும்
அருகே
அரு அருகே கிடந்தோம்
யாரும் இல்லா
நதியின் மடியினிலே....


விழியால்
கவிதை ஒன்றை கதைத்தாய்
துள்ளி எழுந்த மீனாய்
அதில்
சிக்கிக்கொண்டேன் புழுவாய்
வலுவாய்
உன்னிடையே
இடையில்லா இடையே .!!

எழுதியவர் : அருண்வாலி (4-Jul-16, 8:58 pm)
பார்வை : 116

மேலே