நான் உனை

உயிரே
மரித்து போகிறேன்
முத்தம் தா

என்னை ஏன்
இந்த உலகத்தில்
பிறக்க வைத்தாய்
நான் நீ நாம் மட்டும்
வாழும் உலகு ஒன்று வேண்டும்

இயற்கை உலகம் போதும்
அதுவே எங்கள்(நம்) உலகம்
(எங்கள் உலகம் அதுவே)
செயற்கை மனிதன் வேண்டாம்
செயற்கை தெய்வம் வேண்டாம்

பசுமை வாழ்க்கை போதும்(வேண்டும்)
பச்சை புல் படுக்கை வேண்டும்
உன் மடியில் நாளும் நானே
மெய்
சிலிர்த்து கிடக்க வேண்டும்

காதல் கொண்ட நெஞ்சம்
நமை தாங்கும் மண்ணிலே
நாளும் நான் உனை தானே
சுமப்பேன் நெஞ்சிலே
மூச்சே நீ எனும் போது
நான் உன்னில்
கரைந்த நேரம்
மூச்சும் முட்டிக் கொள்ள
உன் வாயால்
என் வாய் வைத்தே
சுவாசம் தந்திடு

தேன் துளி தான்
உந்தன் முத்தம்
என்பேன்
தேகம் சிலிர்க்கும்
பனியோ
என்னை அரவணைக்கும்
உந்தன் மேனி என்பேன்

பால்வொளி நிலவு தானே
உந்தன் பற்கள் என்பேன்
பல்லை கண்டபோது
இந்த கனியை ருசிக்க வேண்டும் என்பேன்


குளிர் காற்றின் வாடை தானே
அவள் சேலை என்பேன்


கார் கூந்தல் இதுவென்றால்
கார் மேகம் எதுவென்பேன்

தாமரை மலரை
பார்க்க
அவள் முகத்தை
காண வேண்டும்

தேகம் சிலிர்க்கும்
தென்றல்
அவள் மேனி என்பேன்

உன்னை விட்டு பிரிந்திருக்க
என்னால் முடியாது
என்னை கட்டிக்கொள்ள
உந்தன் கைகள் ஏங்கவில்லையா
எந்தன் காதல்
உந்தன் விழியில் தெரியவில்லையா
எந்தன் மார்பும்
உந்தன் மார்பில்
சாயத்தானே

உன்னை தவிர
யாரு
என்னை நன்றாய் புரிந்தவர்
கண்ணில் நான் சொல்வதை
நீ கையால் செய்கிறாய்

நான் சொல்ல தயங்குவதை
நீ சொல்லி முடிக்கிறாய்

என் ஆசைகளை
எனை கேட்காமலேயே செய்கிறாய்


உன் மடியில் சாய
நினைக்கும் பொழுது
எனை தானாக வாங்கிக் கொள்கிறாய்

சொர்க்கம்
என்பது வானத்தில்
இல்லை
நாம் வாழும் வாழ்க்கை தான்

நான் உனை நேசிக்கிறேன்
நானும் உனை சுவாசிக்கிறேன்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (4-Jul-16, 9:45 pm)
Tanglish : naan unaai
பார்வை : 360

மேலே