ஆத்துமி, ஆத்துமி
யார பாட்டி ஆத்துமி ஆத்துமி-ன்னு கூப்படறீங்க?
நா யாரடி கூப்படப்போறென் அஞ்சலை. எம் பேரனத்தான். எம் மவன் புதுசா ஒரு கட்சில சேந்துருக்கானாம். அந்தக் கடசிப்பேரு ஆமாம் ஆத்துமி-யாம். அந்த ஆத்துமிங்கற பேரத்தான் பேரனுக்கும் வச்சிருக்கான்.
ஆமாம் பாட்டி அண்ணன் அந்த ஆம் ஆத்மி கட்சியோட மாவட்டச் செயலாளர். அடுத்த தேர்தல்ல அந்தக் கட்சி ஆட்சியப் பிடிக்கப் பொகுதாம். அண்ணன், உங்க மகன் குத்தல் காசிநாதன் அமைச்சராகப் போவது உறுதி பாட்டி
அப்பிடியா எம் மவன் அமைச்சராகப் போறானா? நல்ல செய்திடி அஞ்சலை. சரி அந்த ஆத்துமிங்கற பேருக்கு என்னடி அர்த்தம்?
பாட்டி ஆத்துமியும் இல்ல கொளத்துமியும் இல்ல. ஆத்மி
ஆத்மி -ன்னா மனிதன்னு அர்த்தம் பாடடி.
அடி அஞ்சலை என்னதான் கட்சி மேல பற்று இருந்தாலும் பெத்த பையனுக்கு மனிதன் -ன்னா பேரு வக்கறது? என்னமோ நம்ம தமிழ்ல நல்ல பேர்ங்களே இல்லாத மாதிரி.
அவங்க அப்பா இப்ப உயிரோட இருந்தா எம் மவன நல்லா மொத்தி உட்டுருப்பாரு.
@@@@####@@@@#@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப்பற்றை வளர்க்க.
@%@
எம் மொழி செம்மொழி
சீரிளமை குன்றாத
உலகின் முதன் மொழி!
@@@@@@