எண்ணச்சிதறல்கள்

ஒரு துளியை வீசியெரிந்தேன்
கண்ணாடியில் பட்டுத் தெரித்து
பல துளிகளாய் சிரித்தது…
எது கடைசித்துளி…?

ஒற்றைக் குயிலின்
பாடலென
சிரித்துப்போகிறாய்…
காதல் காற்றில் கலக்க
எல்லோரும் சுவாசித்தோம்

கருங்காட்டின் கரை தொட்டுப்போகும்
வெள்ளையாறாய்
நரை முடி
வயசாகுதில்லே
சொல்லிச் சிரிக்கிறாள்
நாடிக்கிழவி…
கால அலைகளின்
வெள்ளை நுரைகளென…
நிரைதுக்கிடக்கிறது
என் கன்னத்து தாடி…

கடவுளை ஒத்ததாயிருக்கிறது
உன் தயவுகள்
ஒவ்வொரு வரத்திற்கும்
தவமிருக்கத்தயார்
நீயே கடவுளாயிரு…

மறக்க நினைக்கும் எல்லா
விஷங்களையும் ஒழுங்காய்
வரிசைப்படுத்தியவனிடம்
திடமாய் சொன்னேன்
எதற்கும்…
நீ
ஒரு முறை திரும்பச்சொல்லென…..

குடத்திற்குள்
அடைபட்ட ஒற்றைசூரியன்
ததுதும்பி ததும்பி
வெள்ளிச் திதரலென
பலவாய்…
எதும் ஏகம் அல்ல கண்ணா….

தனித்து நிற்கும்
ஒற்றை சொல்லில்
தேடுகிறான் வாக்கியங்களை
புத்தனென சிரிக்கிறது
குழந்தை…

நீள் அலைகளின்
பிம்பங்களென
கோனலாயும் கூனலாயும்
நிற்க வேண்டியிருக்கிறது
செல்ஃபிக்கு….

ஒவ்வொன்றின் முடிவிலும்
தெளிவாய் அறிய முடிகிறது
இதுவும் முடிவில்லையென…
இன்னொன்றின் ஆரம்பமெனவே
முடியும் எல்லாமெனில்…..
முடிவிலி தான் சரி
பாலைவன மணற்காற்றாய்
அலையும் என் எண்ணச்சிதறல்…

எழுதியவர் : ரிஷி சேது (5-Jul-16, 9:56 pm)
பார்வை : 83

மேலே