சின்னதாய் ஒரு ஆசை

இணை பிரியா உறவுகள் வேண்டும்
தினம் விடியா இரவுகள் வேண்டும்
பல குறும்புகள் நான் செய்திடும் பொழுது
அதை நீ தடுக்காமல் இரசித்திட வேண்டும்

உன்னால் என் உணர்வுகள் ஓங்கிட வேண்டும்
என்னால் உன் உணர்வுகள் தனிந்திட வேண்டும்
அந்தி மாலை வந்தாலே
என் தோள்களில் வந்து நீ சாய்ந்து கொண்டு
எந்நாளும் என்னை மயக்கிட வேண்டும்

அதிகாலை வந்தால்
நீயாகவே தானாய்
என்னிலிருந்து எழுந்திட வேண்டும்
பகல் வேளையில் நீயும் விலகிட மறுத்தால்
பல பணிகள் யாவும் அப்படியே கிடக்கும்!

நாம் என்ன புதுமண தம்பதியா?
அறுபது ஆகியும் உனக்கு ஆசை அடங்கலையா?

எழுதியவர் : கிச்சாபாரதி (5-Jul-16, 11:01 pm)
Tanglish : sinnathai oru aasai
பார்வை : 86

மேலே