நிந்திக்காதீர் என்னை

சிறகடித்துப் பறந்தாலும்
சிந்தையில் உள்ளதோ
ஒரே வட்டப்பாதை ...

வட்டத்தை மாற்றி
வெட்டவெளி ஆக்கி
நோட்ட மிடுவதால் ...

பூமியும் புரிந்திடும்
புத்துலகம் தெரிந்திடும்
புதுமைகள் புலப்படும் ...

குறுகிட்ட நெஞ்சமும்
விரிந்திடும் விண்ணளவு
விளங்கிடும் கையளவேனும் ...

செயல்களும் மாறிடும்
செய்தவை மறந்திடும்
செழிப்புறும் வாழ்வும் ...

பிறந்திட்ட எவரும்
மறந்திட்ட பலவுண்டு
அறநெறிகள் சிலவுண்டு ....

சீரழியும் எண்ணத்தால்
சீர்கெடும் சமுதாயமும்
சிதைந்திடும் வாழ்வும் !

சிந்திப்பீர் நீங்களும்
நிந்திக்காதீர் என்னை
நித்தமொரு அறிவுரையா என !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (6-Jul-16, 9:34 am)
பார்வை : 144

மேலே