தூரம் போங்கள் துரோகிகளே
உண்மையான விசுவாசிகள்
உலகத்தில் இல்லை
ஒருத்தரும் இங்கே நியாயமாய் இல்லை ...........
பேச்சும் செயலும்
மாற்றுபட்டு நிற்பதே
மனித அடையாளங்களாய் போய்விட்டது ............
பணமும் பொருளும்
பெரிதாய் தெரிகையில்
விசுவாசம் விலைபோவதென்பது என்னமோ உண்மை ............
ஏதோ ஒருசில எதிர்பார்ப்புகளில்
மனித தர்மம்
பொய்த்துதான் போகிறது ...............
அவரவர் தேவைகளுக்கு ஏற்ப
வழி தவறும் மனிதர்கள்
உலகத்தின் மக்கள் தொகையில் பெரும்பான்மையே..............
துரோகிகளை உலகமெங்கும்
தூவிவிட்ட இறைவனுக்கு
விசுவாசிகளை படைக்க மட்டும் விருப்பமில்லை போலும் ...........
ஆவிகளைக்கூட கண்டு பயப்பட தேவையில்லை
இந்த பாவி மனிதர்களை கண்டுதான்
மனம் பயப்பிடுகிறது ............
விசுவாசமே மனிதனின் அடையாளம்
என்பதனை மறந்து
காலங்கள் பலவாகின்றன ..............
எதுவாயிருந்தாலும் விசுவாசிகளையே
உலகம் எதிர்பார்க்கிறது -
இருந்தும் பெரும்பாலானவர்கள் துரோகிகளே ...................