உணர முடியாத வலி

காயங்கள்பலவுண்டு -
கண்களுக்கு தெரிந்ததும் தெரியாததும் ,
ஆறிப்போனாலும் வடுக்களின் தடயங்கள்
மட்டும் மாறிப்போனதில்லை ....................

என்னதான் நாளும் வளர்ந்த
நாகரீக சமுதாயமானாலும்
தன்மானம் சார்ந்த விஷயத்தில்
மனிதனுக்குள் சுயநலம் இருக்கத்தான் செய்கிறது .........

தனது தவறுகளுக்காக
பிறர்மீது எவ்வித பழிகளையும் சுமத்த
பெரும்பான்மை மனித உருவங்கள்
தயங்கியதில்லை ....................

அபரிதமான அற்ப பழி சொற்களால்
ஆயுதம் இல்லாமலே அபாயமாய்
நல்ல உள்ளங்கள் தாக்கப்படுவதும்
கண்கூடான உண்மை ..............

ஒருசிலரின் உண்மை முகத்தை
வெளிக்கொண்டுவருகையில் வேண்டாத
விரும்பத்தகாத பட்டங்களும்
மனிதனின் நடத்தைக்கு கிடைக்கத்தான் செய்கிறது ..............

வழிதவறுபவர்களை வழிநடத்தும்
தலைமை உள்ளங்களை
சிலநேரங்களில் அபாண்ட பழிச்சொற்கள் கூட
அநியாயமாய் பழிதீர்த்துக்கொள்கின்றன ...........

உண்மையைவிட வதந்திகளையே
உறுதியாய் நம்பும் பொய்யான உலகத்தில்
உண்மையை இறைவன் ஒருத்தனே அறிவான்
உலகம் மெல்லவே புரிந்துகொள்ளும் ...........

இருந்தும் பழிக்கப்படும் மனிதனின்
மனக்குமுறல்களை உணந்துகொள்ள
ஏதோ ஒரு நேரத்தில் அதே அனுபவத்தை
அனுபவித்தவனுக்குத்தான் தெரியும் -

பழிச்சொல் என்பது பெரும்பாலும்
உணரமுடியாத வலியே !!!!!!!!!!!!!!


கவிஞர் சுந்தர விநாயகமுருகன்
புதுவை

எழுதியவர் : விநாயகமுருகன் ` (6-Jul-16, 9:15 am)
பார்வை : 122

மேலே