விழிப்புணர்வு
உறக்கம் வராமல்
மின்விசிறியின் வேகம் குறைத்து
ஆயிரத்திலிருந்து தலை கீழாக
சொல்லிக்கொள்ள ஆரம்பித்தேன்..
இந்த உறக்கமற்ற ராத்திரி வேளையில்
மனப் புழுக்கமும் தீர வெளியே
போய் உலவிவிட்டு வந்தால் என்ன ..
அல்லது நண்பர் ஒருவர் கேட்ட மாதிரி
ஒரு விழிப்புணர்வு கவிதை எழுதினால் என்ன
என்று தோன்றியதால் ..
கவிதையே மேல் என்று முடிவு செய்த மனத்தை
உசுப்பி எழுப்பி விழிப்புணர்வு கவிதை ஒன்றுக்கு
கருவொன்று தாவெனச் சொல்ல
மனம் என்னிடம்
"உறங்குபவர்களே ..விழித்துக் கொள்ளுங்கள்..
உங்களை சுற்றிலும்
மேகங்களையே கொளுத்தும்
அக்கினிச் சூரியன்கள் உங்களையும் அழிக்க
முடிவெடுத்து விட்டார்கள் .. "
என்று தொடங்கி
ஏதேனும் ஒரு இஸத்தை
சேர்த்துக் கொள் ..என்றதால்
ஒரு விழிப்புணர்வு கவிதை மலர்ந்தது
என்றுதான் சொல்ல வேண்டும் ..உங்களிடம்!