வாழ்த்துகிறேன்

வாழ்த்துகிறேன்!!!
***************************
இன்பம் பொங்கும்
ஈகைத்திருநாள் தனிலே
அனைவர் உள்ளம் பொங்கும்
எங்கும் மகிழ்வு பொழிய
வாழ்த்துகிறேன்!!

புத்தாடை அணிந்து
உள்ளம் கனிந்து
ஒன்றாய்க்கூடிக் களித்தே
பங்கம் இன்றி சங்கம் சேர
வாழ்த்துகிறேன்!!

பகை மறந்தே
ஒற்றுமை தழைக்க
உறவுகள் கை கோர்த்திட வந்த
இறை தந்திட்ட இந்நன்நாளை
வாழ்த்துகிறேன்!!

ஏழை எளியவர்
செல்வந்தன் தனவந்தனெனப் பாகின்றி
படைத்தே உண்டு
பரவசமாய் பழகிடும் இந்நாளை
வாழ்த்துகிறேன்!!

பசியாய் இருந்திட்ட
ஓர்மகிமை மாதம் கழிந்தே
இனிமை தந்திடும்
இரவாப் புகழ் படைத்த நாளை
வாழ்த்துகிறேன்!!
!ஜவ்ஹர்!

எழுதியவர் : ஜவ்ஹர் (6-Jul-16, 1:26 pm)
Tanglish : vazhthugiren
பார்வை : 250

மேலே