தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 4--முஹம்மத் ஸர்பான்

31.பிச்சைப் பாத்திரத்தின் ஈரமான முகங்கள்
சமூகத்தின் பார்வையில் இழிவாய் தெரிகிறது

32.இறந்த காலத்தை நினைத்து நினைத்து வாழும்
நிகழ்கால வாழ்க்கை வீணாகிப் போன
தொடர்கதையின் கதாபாத்திரத்தை ஏற்கிறது.

33.எல்லையில்லா வானில் சிறகடிக்கும் பறவைகள் கண்டு
ஊனமான மனிதனின் சிறு இதயம் பொறாமை கொள்கிறது,

34.மேகங்கள் பொழிகின்ற தூய்மையான மழைத்துளிகளும்
மனிதர்களின் கால் தடம் பட்டதால் அசுத்தமாய் போகிறது,

35.வேஷமான உலகில் யாரையும் நம்பாத மனிதன்
இரைகின்ற கடலின் அலைகளிடம் ரகசியம் சொல்கின்றான்.

36.உள்ளங்களின் அமைதியில் கனவுகளின் வாசஸ்தலம்
தொடுகின்ற காற்றில் உடைகின்ற மண்ணுடல்கள்
சுக்கு நூறாய் சிதறியும் பொய்த் தோற்றத்தில் மாற்றமில்லை

37.நரம்புகளின் ஒருமைச் சொல்லில் தோளெனும் பன்மை
என்புகளின் வாக்கியத்தில் உயிரெனும் முற்றுப் புள்ளி

38.காகிதக் கப்பலின் கடவுச்சீட்டும் விற்பனை செய்யப்படுகிறது
காமத்தையும் கூட்டாக பங்கு போடும் நாகரீகச் சந்தையில்

39.பணக்காரனின் மரணத்தில் கலந்து கொள்ளும் உள்ளத்தை விட
பசிக்கும் ஏழையின் அட்சய பாத்திரத்தில் சில்லறை போடும் கைகள் மேல்

40.சடலங்கள் உறங்கும் கல்லறைத் தோட்டத்தில் உதிர்ந்த சருகை போல்
பேரழகியின் கல்லறை வாசகத்தில் பொறிக்கப்பட்ட காதல் கடிதங்கள்
அமில வீச்சினால் தோற்றமிழந்த பெண்ணின் கதவை சத்தமின்றி தட்டுகிறது

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (6-Jul-16, 7:26 am)
பார்வை : 108

மேலே