குணம் அறிந்து வாழ்வோம்

குணம் அறிந்து வாழ்வோம்

மனித இனத்தை சிறப்பிப்பது மானம்
பண்புகளில் மிகச் சிறந்தது நிதானம்
அவனியில் அமைதி காக்க சமாதானம்
அருளுக்கு மனம் நாடுவது சன்னிதானம்
தானங்களில் தலை சிறந்தது அன்னதானம்
அழகு செய்ய பயன்படுத்துவது விதானம்
மனதிற்கு அமைதி தருவது இனிய கானம்
கண்ணுக்கு காட்சியாய் நிற்பது அந்தி வானம்
காட்சிக்கு களையூட்டுவது இனிய வண்ணம்
பெண்ணுக்கு இயற்கையில் வருவது நாணம்
உள்ளங்களில் நிறைந்து இருப்பது எண்ணம்
மனதிடம் உள்ளவர்கள் பெறுவது திண்ணம்
எல்லோருக்கும் வேண்டியது நல்லெண்ணம்
குவலயத்தோர் போற்றி புகழும் குணங்களை
நாமெல்லாம் பெற்று மகிழ்வுடன் வாழ்வோம்

எழுதியவர் : கே என் ராம் (30-Apr-24, 4:25 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 18

மேலே