செல்லம்மா....
அடியே செல்லம்மா...
ஆசைவச்சேன் நில்லம்மா..,
ஆத்துவெள்ளம் தீருமுன்னே
ஆசையைத்தான் சொல்லம்ம்மா...!.
ஆளான நாள்முதலாய்
அச்சாரம் போட்டேண்டி,
அத்தே பெத்த பொண்ணுன்னு
ஆசையத்தான் வளர்த்தேண்டி..,,!
மாமன் மகள் நீதானே..
மஞ்சத்துக்கும் நீதானே...
மஞ்சப்பூசி நிற்கையிலே
மல்லிப்பூ வாங்கித்தாரேன்!
நீரும் இறைக்கையிலே..
குடமும் தூக்கையிலே
தாவணி சிரிக்குதடி
மச்சான் மனசு வேகுதடி,!
நீராடும் வேளையிலே
தாவணியை பிழிந்தவளே
ஓரமா நீயும் வந்தா
நானும் நீயும் சேரலாமே..!
மாமனிடம் சொல்லியாச்சு
மாசிமாசம் வந்தாச்சு,
தூரமா நீ நின்னாலும்
தூக்கம் கெட்டுப்போகுதடி..!!