தோழி

ஒரு கேள்வி
தோழி

உன்னிடம்
ஒரு கேள்வி ....

சில நேரங்களில்
என்னை உன்னிடம்
தொலைக்கிறேன்
தேடுவது போலவும்
நடிக்கிறேன் .....


நீ கோர்க்கும்
புகை படங்களை
பல நேரம்
உற்று பார்க்கிறேன்


உன் விழிடம்
எதையோ கேட்க
துடிக்கிறேன் ...

தமிழா ...
நட்பா
அன்பா
வேறு எது ? .....

கரையான் கட்டும்
கோட்டையில்
பாம்பு குடியேறியது போல
என் மன கோட்டையில்
ஏதோ ஒன்று .....

உன் குறுந்தகவல்
இல்லையென்றால்
பைத்தியம் பிடிக்கிறது ..
கைபேசி விதவை
ஆகிறது .....

உன் ஓற்றை
கூந்தலில் சிக்கிய
மல்லிகை
என்னை கேலி
செய்கிறது .....

முற்றும் துறந்தவன்
முற்றம் பார்க்கிறான்
நட்பிலா ....
இல்லை ....?


உன் இதழ்
மீது சிந்திய
வர்ணம் நட்பை
தாண்டி எல்லை கோட்டை
மீறுகிறது .....

அழகில் நீ நிற்க
ஆசை வருவது
முறைதானோ...

போதும்
உன் விழியை
கொஞ்சம் மூடி கொள் ...
நான் கொஞ்சம்
கனவில் நட்பு
பேசுகிறேன் .....

உனை வர்ணிக்க
ஆசை ...
வர்ணனை
வயது வந்தவர்களுக்கு
என்ற நிலை

நீ முறைக்க வில்லை
என்றால்
மறுக்காது
என் கவி
உனை சீண்டும் ,,,,


தொடரும்
நாஞ்சில் இன்பா

எழுதியவர் : நாஞ்சில் இன்பா (6-Jul-16, 5:49 pm)
Tanglish : thozhi
பார்வை : 154

மேலே