சில சொற்களோடு ஒரு நதி - சந்தோஷ்
பிச்சைக்காரன் தட்டில்
நிறைந்திருக்கிறது
வெள்ளி நட்சத்திரங்கள்..!.
--
மணல் வீடு
கட்டும் மழலையிடம்
பட்டா கேட்பதில்லை
கடற்கரை..!
--
மழை வந்தால்
குடத்தில் பிடிக்காதீர்...
குளத்தில் பிடியுங்கள்..!
ஜென்மத்திற்கும் தாகம் தீரும்..!
---------------------------------------
நதி
*****
நதியிலோடிய
ஒ்ளியலைகளை பருகினேன்.
இதோ....என்
வயிற்றுக்குளத்தில்
சூரியத் தேவதை..!
--
என் பொன்நிலாவை
குளிப்பாட்டும்
நதியும் பேரழகுதான்.
--
நதியை குடித்திருக்கிறேன்.
யாரும் என் வயிற்றில்
மிதக்காதீர்கள்..!
-
முழு நதியையும் பருகிவிட்டேன்.
என் வயிற்றிலோர் ஓடம்
ஓடுகிறது.