கரும்பலகையாய் நீ
அன்றுதான் பார்த்தேன்
அவளை.. வகுப்பில்
கறுப்பாகவே இருந்தாள்
என்னுடன் இருந்தவர்களும் கூட
அவளையே உற்றுப் பார்த்து
கவனித்துக் கொண்டிருந்தார்கள்
அவளிடமிருந்துதான் நான்
நிறையக் கற்றுக் கொண்டேன்
அவள் என்னோடு..
வருவாள் என்று எதிர்பார்த்தேன்..
இறுதியில்
நானோ...
ஜெயித்து
வெளியே போனேன்
அவளோ ..
அதே வகுப்பில்
தோற்றவளாய் இருந்தாள்..
ஆம்..
ஒவ்வொரு வெற்றிக்கும்
தோற்றவர்கள்தான்
பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள் !