வாழ்க்கையில் கனவுகள்
கனவெல்லாம் நினைவாவதில்லை
நினைவுகள் நிரந்தரம்
கனவுகள் வந்து போவன
சிலபோது கனவில் வந்த காட்சி
நினைவாய் அமைந்து விடலாம்
ஏன் எப்படி யாரறிவார் நெஞ்சமே
அப்படித்தான் பேரறிஞர் சிலர்
தங்கள் படைப்புகள் பலவற்றை
கனவிலே கண்டதாய் சரித்திரம் கூறுது
அவர்களில் சிலர் கணித மேதைகள்
சிலரோ விஞானிகள் மற்றும் சிலர்
கவிஞர்கள் இன்னும் ஏனையர் கலைஞர்கள்
கனவு நினைவாகி
நினைவே நன்மைகள் பயக்கின்
கனவுகள் வரப்பிரசாதம்
சில தீய கனவுகள்
முன்கூட்டி நிற்கும் எச்சரிக்கைகள்
நினைவெல்லாம் கனவாவதில்லை
கனவெல்லாம் நினைவாவதில்லை
கனவே வாழ்வாவதில்லை
கனவுகள் வாழ்வில் வந்து போகும்
வழி போக்கர்கள்
நினைவாகும் கனவுகள்
வீடு சேர்ந்த வழிப்போக்கர்கள் !
இருண்ட மனதிற்கு
வெளிச்சம் தருவது
கனவாம் சின்னத் திரை
கனவிலேயே வாழ வேண்டாம்
கனவோடு வாழலாம்
கனவே வாழ்வாவதில்லை
-----------------------------------