இன்று நான் நாளை நீ

தங்கத்தை பூட்டிவைக்க
இரும்பு கதவிருக்கு
இரும்பு கதவிற்கு ? !

எது இருக்கு...

உண்மையை விடுத்து (விற்று )
பொய்மையை எடுக்கும் (வாங்கும் )
உலகடா இது


இதில் பால் எது
நீர் எது
யாருக்குத் தான் தெரியும்
அன்னம் வந்தால் ஏமாந்தே
போகும்

பாலை விடுத்து விட்டு
தண்ணீரை குடித்துவிட்டே போகும்
காகம் வந்தால்
தண்ணீர் இன்றி ஏமாந்தே போகும்
அது கல் போட்டு
கல் போட்டு
கால் உடைந்து போகும்
அது ஓட்டை சட்டியாகும்
மனிதன் ஏமாந்து ஏமாந்து
எங்கெங்கும் ஓடி
அலைந்து திரிந்து
தாகம் தணியாமல்
வருவான்
வந்து மல்லாந்து மல்லாந்து
பசி உயிரை கொல்ல
பட்டினியில் படுப்பான்.
எங்கேயோ தண்ணீரின்
சத்தம் காதில் சில்லென்று விழ
யாருக்கும் சொல்லாமல்
ஆர்ப்பரித்து ஓடிடுவான்
அங்கே தூரத்தில் தண்ணீர்
இருப்பதை கண்டு
விரைவாய் ஓடிப்போனான்.
நீரும் தள்ளி தள்ளி ஓடி
போக்கு காட்டியது
இறுதியில்
கண்டு கொண்டான்
நீரை
அள்ளிக் குடித்தான் நீரை
அதில் மயங்கியும் போனான்
அந்த வழியாய் போனவர்கள்
ஆபத்திற்கு கூட தண்ணீர் தெளிக்கவில்லை
யாரோ ஒரு பரதேசி
கழிவு நீரில் மயங்கி கிடக்கின்றான்
என்றே சொல்லி தள்ளிப்போனது


~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (8-Jul-16, 11:59 am)
பார்வை : 1711

மேலே