இதுதான் என் உலகம்
இதுதான் என் உலகம்
உலகோடு ஒத்து வாழ்
யாரோ சொன்னது ?
அந்த யாரோ சொன்னதின்
விளைவு
எல்லாவற்றையும் சகித்து கொண்டு
வாழ பழகினோமே தவிற
வேறு என்ன செய்தோம்
தாய் மொழி சிறந்தது
என்பதில் சிரிதும்
தயக்கமில்லை
ஆனால் வெறும் தாயோடு மட்டுமே
நின்று விடுவதில்லை வாழ்வு
அதையும் கடந்த சில பல
உறவுகளின் தொகுப்பே
வாழ்க்கை
தமிழை தவிர
அண்ணிய மொழியை
எதிர்த்த தலைவர்களின்
வாரிசுகள் அனைவருமே
அரசியல் உலகில்
அண்ணிய மொழியால்
ஆதிக்கம் செலுத்தியவர்களே
ஆனால் நாம் மட்டும்
தேசத்தினை ஆள்பவரின்
உறைக்கு கூட
அர்த்தம் புரியாமல்
புலம்புகிறோம்
இதுதான் தமிழை காட்டி
ஆட்சி புரிபவர்களின்
சாதனை
அவர்களுக்கு புரிந்தால் போதும்
அவர்கள் சொல்வதே
வேதவாக்காய் நாம் நினைக்கவே
மட்டம் தட்டியதை
இன்று வரை பலரும்
அறியவும் இல்லை
மது குடிக்கும் காட்சியையும்
புகை பிடிக்கும் காட்சியையும்
அனுமதித்து விட்டு
ஒப்பிற்கு சப்பானாய்
ஒரு அட்டை மட்டுமே
திரையில்
மது, புகை போன்ற
காட்சிகளை தடை
செய்ய கூட
யாருக்கும் தோன்ற வில்லை
அதனினும் கொடுமை
ஆபாசத்திற்கு கூட
அளவு வைத்துவிட்டு
ஏ படமா, யூ படமா
என்பதோடு நிற்கும் நிலைதான்
என்றும்
மாமியார் மருமகள்
என்றாலே சண்டை தான்
என்ற பொய்யான தகவலை
தயக்கமின்றி பரப்பி பரப்பி
கூட்டு குடித்தங்களை
தனித்தீவாய் சிதறடித்ததுதான்
சீரியல்களின் சாதனை
எந்தந்த நாட்டில்
எந்தந்த மருந்துக்கும்
உணவு வகைகளுக்கும்
தடை என்பதை
வாட்சப்பிலும், முகநூலிலும்
பதிவேற்றம் செய்து
எத்தனை லைக்
வருகிறது என்பதை
கணக்கிட்டே அழியும்
என் சமூகத்திற்கு
இவற்றை தடை செய்ய
ஒரு பொது நல வழக்கு
போடவேண்டும் என்ற
எண்ணம் கூட இல்லை
எந்த விஷயம் நடந்தாலும்
அதை பெரிதாய் சித்தரித்து
தங்களின் டி.ஆர்.பி ரேட்டை
உயர்த்தும் சேனல்களுக்கு
அதனால் எழும் பாதிப்புகளுக்கு
தாங்கள் தான் விதை
என்பதை கூட ஒப்பு கொள்ள
மனமில்லை
காரணம் அடுத்த விஷயத்தை
சித்தரிப்பதற்கே
அனுதினமும் யோசனை
எப்படியாவது தன் பிள்ளைகளை
பொறியாளன் ஆக்கிவிட
வேண்டும் என்ற பலரின்
கனவுகளே
பல பொறியாளர்களை
வேலை தேடி அலைய வைத்தது
நல்லா படி,
நல்ல வேலைக்கு போ,
என்று அறிவுரை கூறும்
யாரேனும் ஒருவர் கூட
நீ முதலாளியாய் மாறி
பிறருக்கு வேலை தா
என்று கூறுவதில்லை
அடிமையாய் வேலை செய்யவே
சான்றிதழ்களை சுமந்து கொண்டு
அன்றாடம் அலைகிறோம்
தன்னை பார்த்து
நடை உடை பாவனையை
மாற்றி கொள்ளும் ரசிகன்
தான் நடிக்கும் தவறான
காட்சிகளுக்கும் தன்னை
மாற்றி கொள்கிறான் என்ற
குற்ற உணர்வு கூட இல்லை
நடிகர்களுக்கு
நம் கண் எதிரே
நடக்கும் தவறுகளை கூட
தட்டி கேட்க மறுக்கின்றோம்
நமக்கு நடக்கவில்லையே
என்ற நிம்மதி பெருமூச்சு வேறு
தேவை இன்றி
பேசும் செல்போன் நிமிடங்கள் தொடங்கி
வாட்சப் முகநூல்
என ஒவ்வொரு நொடியிலும்
யாரோ ஒரு அன்னிய நிறுவனம்
தன் லாபத்தை அடைவதை கூட
அறியாமல்
தன் உழைப்பை விற்று
ரீச்சார்ஜாய்
தன் பொருளாதரத்தையும்
நாட்டின் முன்னேற்றத்தையும்
முடக்கி போடுவதை கூட
நான் உட்பட
யாருமே கண்டு கொள்வதில்லை
இது தான் என் உலகம்
சுதந்திரத்திறக்காய்
பாடுபட்டவர்களின்
உதிரங்களுக்கும்,
உயிர்களுக்கும்,
ஏக்கங்களுக்கும்,
கனவுகளுக்கும்,
இழப்பிற்க்கும்
என்றுதான் பதில் சொல்ல போகிறோமோ ?
ஏக்கங்களுடன்
ந.சத்யா