ட்ராகன் பழம் பறிக்க போறேன் வாரிகளா

ட்ராகன் பழம் பறிக்க போறேன் வாரிகளா !!!

ஆம் இப்போது நான் ட்ராகன் பழம் தான் பறிக்க போகிறேன்..

ஆள் அரவமற்ற அடர் வனாந்தரத்தில் இப்போது நானுள்ளேன்..

என்னைச்சுற்றி எங்கு பார்ப்பினும் பச்சை, எதை நோக்கினும் பச்சை;

ஆனால் ட்ராகன் பழம் ரோஸ் கலரில் அல்லவா இருக்கும்??

நானிப்போது நெடுந்தூரம் நடக்க வேண்டும், அதோ அக்கறை தெரியா ஆற்றை கடக்கவேண்டும் அப்பழத்தை நானடைய;

இப்போது சரியாக மணிக்கணக்கு தெரியவில்லை, எனக்கு பசிக்கறது; ஒருவேளை உங்கள் கடிகாரம் ஒன்பதை காட்டலாம்;

அதோ, கொய்யா மரம் கொய்யா மரம் என்றபடி கிளிகள் கீச்சிடுகின்றன; அம்மரத்தில் தான் எத்தனை கொய்யா பழங்கள்;

அந்த கிளிகளும் சின்னஞ்சிறு அணில்களும் எனக்காக சிலவற்றை விட்டுச்சென்றுள்ளதை கண்டு மகிழ்ந்தேன்;

அந்த கிளிகளுக்கு தெரிந்திருக்கக்கூடும் அவைகளை விடவும் அந்த கொய்யாவை விரும்புபவன் நானென்று;

அந்த கொய்யாவால் மீண்டும் பசிக்காதவாறு எனை பார்த்துக்கொண்டு நடை தொடர்ந்தேன்!!

அப்போது ஒரு கோதுமை நிற பாம்பொன்று கண்டேன்; இருவரும் அசையவில்லை, யாராலும் யாருக்கும் பாதிப்பில்லா வண்ணம் அவரவர் திசை நோக்கி பயணப்பட்டோம்;

அப்போது ஒரு குருவி வந்து என்னிடம் சொன்னது, அதோ அங்கு ஒரு குகை உள்ளது, சிங்கம் வருவதற்குள் சென்று உறங்கிடவேண்டும்; நாளை காலை இருவரும் ட்ராகன் பழம் இருக்கும் திசை நோக்கி பறக்கலாம் என்றது;

இப்போது சொல்லுங்கள் யார் யாரெல்லாம் என்னோடு ட்ராகன் பழம் பறிக்க வாரிங்க !!!!!!

எழுதியவர் : காவி (9-Jul-16, 3:11 am)
பார்வை : 195

மேலே