வேண்டுதல்…

குலமது காக்கும் சாமியென்றே
கும்பிட வைத்தார் முன்னோர்கள்,
நிலமதன் வருவாய் குறைந்ததாலே
நகரை நாடினர் கிராமத்தார்,
உலகைக் காப்பது கிராமமென்ற
உண்மையை உணர வைத்திடுவீர்
சிலையாய் நிற்கும் சாமிகளே
சிதைந்த நீவிரும் சீர்பெறவே…!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-Jul-16, 6:43 am)
பார்வை : 91

மேலே