போவோமா
காஙாசா
ஜா ஜா ஜா
தா லா லா
தா லா லா
நீ தானா
விண்மீனா!
நான் என்ன?
வெறும் மண்ணா.....
வீடேன்றாயா
பூட்டிவைக்க
காற்றடி நான்
காற்றாடி போல்
எனை சுற்றவைப்பேன் பாரடி
இதுபோல்
சொல்ல
உனக்கு தோனலையா
என் கண்மணி
இதுபோல்
சொல்ல எனக்கும்
ஆசை தான்
அன்பே
ஆனால்
வார்த்தையில்
சொல்லுவதை விட
வாழ்ந்து காட்டவே
நினைக்கிறேன்
நீ என் மண்தானடா
செத்தாலும் உன்னில் தான்
வீழ்வேனடா
வளர்ந்தாலும்
உன்னில் தான்
மரமாய் வளர்வேனடா
உன்னை
என் இதய வீட்டில்
பூட்டி வைத்து
சாவியை
தெரிந்து உன்னில்
வைத்துவிட்டேனடா
உன்னை என்னாளும்
என் நெஞ்சில் வைத்து காப்பேனடா
உனக்கு விமோசனம் என்பதே கிடையாதடா
உன்னை கொண்டு
என்னை திறடா
என்னை உனக்குள்
இடம் மாற்றடா
எனக்குள் என்றும் நீயடா
யார் வந்து தடுத்தாலும் மாறாதடா
உனக்குள் நானே தானடா
பூட்டும் சாவியும்
கட்டிக்கொள்ளவேண்டுமடா
உயிர்கள் பரிமாறிக்கொள்ள வேண்டுமடா
ஆனால் இரண்டுக்கும் விடுதலை
என்பதே கிடையாதடா
இது சுகமான வரமடா
நான் என்னில்
இருப்பதை காட்டிலும்
உன்னில்
இருப்பதே
மிக சந்தோஷமாக கருதுகிறேன்
நீயும் என்போல் உணர்கிறாயா டா
இருவரும்
இவ்வுலகில்
இருந்து
விடை பெற்றாலும்
நம் ஆத்மா ஒன்றை ஒன்று
கட்டிக்கொண்டு தான் இருக்கும்
இதில் என்ன அடிமைத்தனம்
இது அன்பு பரிமாறும் இருமனம்
இல்லை ஒருமனம்
இது உயிரை தாங்கும்
இரு உடல்
இல்லை ஒரு உடல்
தமிழே
நீ மட்டும் தான் உண்மை
நான் உன் பிம்பம்
நீ இல்லை என்றால்
நானும் இல்லை
நீ வாழும்
காலம் யாவும்
நானும் வாழ்வேன்
உன்னில்
வாழ்ந்து பார்ப்போமா
அன்பே
ஒருவரை ஒருவர்
தொலைப்போமா
மாற்றி மாற்றி
வாழ்வின்
ரகசியத்தை
தேடி
அறிய
ஒன்றாக
கைக்கோர்த்து
போவோமா...........
நான் தயார்
நாமும் தயார்
நீ என்பதே
நான் என்பதே
நாமாகி போச்சி
ஒருவரை ஒருவர் தேடுவது
இனி இல்லையாச்சி
ஒருவரின் தேடல் தான்
இன்னொருவரின் தேடல்
ஒருவரின் பயணம் தான்
இன்னொருவரின் பயணம்
கடவுள் போட்ட
முடிச்சிது
யாராலும்
அவிழ்க்க முடியாது
உயிரும் ஒன்று தான்
உடலும் கட்டிக்கொண்டதால்
ஒன்றே தான்
பாதையும் ஒன்றே தான்
ஒரு உயிருக்கு
ஒரு பாதை தானே
வா போகலாம்.......
~ பிரபாவதி வீரமுத்து