மெய்மையே இறைஎன்பேன்
பொய்யை மெய்யாக்க
பொய்யை மெய் மெய்
என்று அறைகூவி திரிவர்
அந்த பொய்யும் மெய்போல்
சில காலம் தெரியும்
வெள்ளைப்பூசிய கருங்கல் பாண்டம் போல்
காலப் போக்கில்
அந்த 'பொய்மெய்' சிக்குண்டு
முகம் கிழிபட
என்றும் அழியா மெய்
தனித்து நிற்கும் எழிலாய்
மிளிரும் மெருகேறிய தங்கம் போல்
தரத்தில் குறையா தங்கம் போல
அழியா மெய் தெய்வத்தின்
அழியா தன்மையை நிலை நிறுத்தும்
மெய்யப்பனாய் நம்கண்முன் நிற்கும்
மெய் தான் இறை
இறைதான் மெய்
அதுவே மறை .
மற்றெல்லாம் வெறும் பொய்யே .