என் தெய்வம்
என் கண்ணீர் துளிகளை
தொண்டை குழியில் ,
அடக்கி அனுப்பும் தருணத்தில் ,
என் மனது தீப்பிடித்து
எரியும் நொடியில்
நரக வேதனையில்
உள்ளம் நொறுக்கும்
சமயங்களில் ,
என்னை ஈன்றவளின்
தேவையை உணர்த்து உண்டு
மின்னல் பொழுதில்
மேருவின் கணமென
கலக்கங்கள் இதயத்தில்
குடிகொள்ளும் போது
தீர்வு குறை அவள் இல்லை
மடுவாக இருக்கும் போது
என்னை விட்டு சென்றவள்
மலையென என் வாழ்வு
மீதம் இருப்பதை அறியாலோ ?
வெற்றியை பகிர்ந்து கொள்ள,
தோல்வியில் தளராது
என்னை தாங்கிக்கொள்ள
என் தெய்வத்தை இல்லாது
செய்த விதியே ,
நீ அறிவாயா ?
என் தாய் இல்லாமல்
வெற்றிகளும் இங்கே தோல்வி தான்.
அன்னை மடியில் உறங்கிய
உறக்கம் என்னும் சொர்க்கம்.
இப்போது நினைத்தாலும்
இதயம் கதைகதையாய் சொல்லும் .
ஆனால் உறக்கம் பறந்து
வெகு நாளாகிவிட்டது
யாருக்கும் தெரியாமல்.
பத்து மாதம் சுமந்தவளை
பத்து அகவையில்
தொலைத்துவிட்ட பாவி நான்.
தாயின் பெருமையை சொல்ல
இந்த பூமி பத்தாதே.
அனைத்திலும் நிறைத்திருப்பவள்
என் அன்னையே.
அவள் ஊட்டியதால்
சோறும் அமுதமானது அன்று .
இன்றும் நான் உண்ணுகிறேன்
அது நஞ்சாகி என்னை கொல்லாமல்,
வயிற்றை மட்டும்
நிரப்பி செல்கிறது
மனதை பட்டினி போட்டு.
உன்னை பிரிந்து நான் இருக்கிறேன்
உயிருள்ள சவமாக.
என்னை இழந்து
நீ பெரிதும் துயர் கொள்வாயோ?
அம்மா கல்லுக்குள்ளும்
ஈரம் உண்டு
எந்தன் சிரிப்பிலும் சோகமுண்டு
இதை புரிந்துகொள்ள யாருண்டு ?
அகல் விளக்கு ஏற்ற
அணைக்கப்படும் தீக்குச்சியாக
நீ எறிந்துவிட்டாய்.
அதை எண்ணி உருகும்
மெழுகாகும் வரத்தைக்கூட
அளிக்க மறுத்துவிட்டாய்
உன் செல்ல மகள்
இதயத்தில் எத்தனை
பாதைகள் அறிவாயா ?
அத்தனையயும் சென்றடையும்
இடம் உன் நியாபகம்
எல்லையற்ற பரந்த
ஆழியில் ,
ஏன் என்னைவிட்டு
சென்றாய் ?
வந்துவிடு
என் மகள் ஆக