மேகங்களே -கங்கைமணி
விண்ணில் பறக்கும் மேகங்களே!
சிறகுகளைக்கொஞ்சம் தாருங்களே !
தாக்கம் எடுக்குது மேகங்களே !
தரை இறங்கி கொஞ்சம் வாருங்களே !
பயிரினம் அழைக்கிது மேகங்களே !
பச்சை ஆடை கட்ட வாருங்களே !
மலைமுடிதொட்ட மேகங்களே !
மண்ணில் அடிவைத்து வாருங்களே!
மண்ணிலும் உள்ளது மேகங்களே !
என்னவள் கூந்தல்தான் வந்து பாருங்களே!!!
-கங்கைமணி