இசையின் காதல்

காக்கை சிறகினிலே
கானம் பாடும் திசையினிலே
என் மோனம் மறைகையிலே
உள் மோகம் பிறக்கையிலே
ஏழு ஸ்வரங்களை தம்
விரல்களின் நுனி இழையில்
பயின்றிடும் இயற்கையிலே
குடி புகுந்திட விளைகிறதே....
மடி இணைந்திட அலைகிறதே...


நிறைமகள் முழுநிலவாய்
தன்னுள் நிறைத்திட்ட கலைமகளாய்
அவள் கரிசனம் காட்டுவிக்க
அதில் அடைக்கலம் புகுந்திடவே
மனம் லயித்திட சுவைத்திடவே
எங்கும் மாமழை பொழிகிறதே
அதில் கானங்கள் வழிகிறதே
இதில் நான் வெறும் சிறு பிள்ளையே
இசைமகள் செய்ததில்லை சிறு பிழையே.....

எழுதியவர் : இந்திராணி (12-Jul-16, 5:41 pm)
Tanglish : isaiyin kaadhal
பார்வை : 160

மேலே