பொறுத்துக்கொள் புதுத்தளிரே

புவியில் புதைத்தும்
விதையொன்று முளைத்தால்
பூரிப்பு விதைக்கு மட்டும்தான்
செடிக்கு அல்ல...
கண்ணில்லா கால்கள் பல
காத்திருக்கும் காலனைப்போல்
போர்வையாக வானிருந்தும்
பொரித்தெடுக்கும் பகலவனும்
பொறுத்துக்கொள் புதுத்தளிரே
தருவாகும் காலம் வரும்......