மகிழம் பூ••••
மகிழம் பூ
மகிழும் பொழுது
மகிழ்வோ மகிழ்வு
மகிழம் பூ
மகிழாப் பொழுது மன
மகிழ்வில் நெகிழ்வு
மகிழம் பூவே நீ
மகிழ மகிழ நின்
மகிழ்வாயுள் கூடிடுமே
மகிழம் பூவே நீ
மகிழாப் பொழுது நின்
மகிழ்வாயுள் குறையுமே
மகிழம் பூவே
மகிழு நீயும்
மகிழா தெனையும்
மகிழம் பூவே
மகிழ வைத்து மகிழு
மகிழம்பூ ப்புட்டு
மகிழம்பூ முருக்கு
மகிழம்பூ அழகுதரும்