நா பாண்டே-டா
என்னடா பாண்டி. வட மாநிலத்துக்கு நீ மாற்றலாகிப் போயி அஞ்சு வருசம் ஆகுது. இப்பத்தான் நீ நம்ம ஊருக்கு வந்திருக்க.
எப்பிடிடா இருக்கற பாண்டி.
@@@@
டேய் நா பாண்டே-டா.
@@@
நான் என்ன கேட்டன் நீ என்ன சொல்லற?
@@@@
நா பாண்டே-டா.
@@@@
என்னடா திரும்பத் திரும்ப பாண்டே-டா, பாண்டே-டான்னே சொல்லிட்டு இருக்கற?
@@@@@@@@@@@@@@@@@@
நா தமிழ் நாட்டில இருக்கவரைக்கும்தா நா பாண்டி. வட மாநிலம் போனதுக்கப்பறம் அங்க இருக்கறவங்களால எம் பேர பாண்டி-
ன்னு சொல்ல முடியல. எல்லாம் பாண்டே, பாண்டே-ன்னு தான் எம் பேர உச்சரிக்கறாங்க. சரி இந்திப் பேரா இருக்கறது நல்லது
தற்காலத் தமிழர்களின் நாகரிகம் என்ற அடிப்படையில் எம் பேர சட்டப்பூர்வமா பாண்டே-ன்னு மாத்திட்டண்டா. இனிமே என்ன
யாரும் பாண்டி-ன்னு கூப்புட்டு அசிங்கப்படுத்திடாங்கடா. என்ன பாண்டே-ன்னு தான் கூப்புடனும், பாண்டே, பாண்டே, பாண்டே.
@@@@
சரிடப்பா இந்திப் பேரு பிரியா பாண்டே.