புன்னகை

ஓ - இளைஞனே!
நீ சிந்தும் ஒவ்வொரு துளி வியர்வையும்
நீ முதுமையில் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீரையும்
அது குறைக்கும்!

கோபம் என்பது
பிறர் செய்யும் சிறிய தவறுக்காக
உனக்கு நீயே கொடுத்துக் கொள்ளும்
மிகப்பெரிய தண்டனை என்பதனை
எப்பொழுது நீ அறியப் போகிறாய்?

நீ சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும்
உன் வாழ்க்கை துயரத்தை விரட்டலாம்...
உன் மரணத் தேதியையும் மாற்றம் செய்யலாம்...
ஆதலால், எப்பொழுதும் புன்னகையை பூக்கச் செய்!

தினம் உன்னைத் துரத்தும் துயரம்
சிரிக்கும் என்னைத் துரத்துவதில்லை!

உன்னை துரத்தும் எமன்
சிரிக்கும் என் முகத்தைக் கண்டால்
மயங்கித்தான் கீழே விழுந்து விடுகிறான்!

எழுதியவர் : கிச்சாபாரதி (14-Jul-16, 10:01 pm)
Tanglish : punnakai
பார்வை : 1684

மேலே